Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





Thiru Neetru Pathikam





திருநீற்று பதிகம்

Thiru Neetru Pathikam





பாடல் எண் : 1

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
   சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
   தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
   செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
   போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
   ஒதத் தகுவது நீறு உன்மையில் உள்ளது நீறு
   சீதப் புனல்வயல் சூழந்த திரு ஆல வாயான் திருநீறே


முக்தி தருவது நீறு முணிவரணீவது நீறு
   சத்யம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
   பக்தி தருவது நீறு பரவ இனியது உள்ளது நீறு
   சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே


கான இனியது நீறு கவினைத் தருவது நீறு
   பேணி அணிபவர் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
   மானந் தகைவது நீறு மதியை தருவது நீறு
   சேணந் தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே


பூச இனியது நீறு புன்னியம் தருவது நீறு
   பேச இனியது நீறு பெருந்தவத் தோற்களுக்கெல்லாம்
   ஆசைகெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
   தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திருநீறே


அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
   வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
   பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் நீறு
   திருத்தகு மாளிகை சூழ்ந்தsச் திரு ஆல வாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
   பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
   துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
   அயிலைப் பொலி தரு சூலத் தால வாயான் திருநீறே


இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
   பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
   தராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு
   அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே


இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
   பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
   தராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு
   அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே


மாலொ டயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
   மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வென்பொடி நீறு
   ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
   ஆலம் துண்டமிடற்றெம் ஆல வாயான் திருநீறே


குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
   கண்டிகைப் பிப்பது மேலுறை நீறு கருத இனியது நீறு
   எண்டிசைப் பட்ட பொருளாரேத்துங் தகையது நீறு
   அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆல வாயான் திருநீறே


ஆற்றல் அடல்விடையேரும் ஆல வாயான் திருநீற்றைப்
   போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
   தோற்றித்தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
   சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே


திருச்சிற்றம்பலம்